திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடுக பாளையத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மனைவி மேனகா.
தனது மகன் ஜகத்தை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு துணி துவைக்க சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தேடியபோது படுக்கை அறையுடன் சேர்த்து கட்டப்பட்டுள்ள கழிவறையில் இருக்கும் தண்ணீர் வாளிக்குள் தலைகீழாக அழுந்தி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டு அந்த குழந்தையை பரிசோதித்த பல்லடம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.