திமுகவில் நடப்பது வாரிசு அரசியல் ..! அதிமுகவில் சாமானியனும் முதல்வராகலாம்..! எடப்பாடி பழனிசாமி நறுக் பேச்சு!!

திமுகவில் நடப்பது வாரிசு அரசியல். அதிமுகவில் தான் சாமானியனும் முதல்வராகலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

சேலத்தில், அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார்.

 

அவர் பேசுகையில், திரைப்படங்கள் மூலம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை கூறியவர் எம்.ஜி.ஆர்.மட்டுமே.எம் ஜி.ஆர். படங்களில் இருந்த உயிரோட்டம் இப்போது வரும் படங்களில் இல்லை. ஏதேதோ தலைப்புகளில் வரும் படங்களில் ஒன்று கூட மனதில் நிற்பதில்லை.

அதிமுகதான் ஜனநாயகக் கட்சி .சாமானியன் கூட எம்.எல்.ஏ., எம்.பி., ஆக முடியும். அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் முதல் வராக தகுதியுள்ளவர்கள். ஒரு பழனிசாமி அல்ல; ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர்.

 

இது போல் திமுகவில் சாதாரண நபர் உயர் பதவிக்கு வர முடியுமா? திமுகவில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது . திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது.

 

இது தெரிந்து தான் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். ஆனால் அது நிறைவேறாது. மக்களும் திமுகவை நம்பி ஆட்சியில் அமர்த்த தயாராக இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.


Leave a Reply