--- --:--:-- --

கனடாவில் பசியால் 40 லட்சம் பேர் பாதிப்பு

15

பணக்கார நாடுகளில் ஒன்றான கனடாவில் பசியால் பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளதாகவும், தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

அந்நாட்டில் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சராசரி உணவிற்காக அன்றாடம் போராடுவதாக கனடா மருத்துவ சம்மேளனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கனடாவின் தொற்று நோய்கள், விபத்துகள், தற்கொலைகள் உள்ளிட்டவை இருமடங்காக அதிகரித்துள்ளதற்கு உணவுப் பற்றாக்குறையே காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

கனடா நாட்டு மக்கள் ஏராளமானோர் ஆரோக்கியமான உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் உளவியல் ரீதியிலான துயரத்திற்கு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon