காதலனை தாக்கிவிட்டு காதலியிடம் அத்துமீற முயன்ற கஞ்சா போதை கும்பல்

வேலூரில் காதல் ஜோடியை கஞ்சா போதையில் தாக்கிவிட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படும் நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

வேலூர் பச்சையப்பாஸ் துணிக்கடையில் வேலை செய்து வரும் அஜித் என்ற இளைஞரும் அதே கடையில் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் இருவரும் கோட்டை பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அஜித்தை தாக்கிவிட்டு இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்றதாகவும் கூறப்படுகிறது.

 

அவர்களிடமிருந்து தப்பிய அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ள நிலையில் கஞ்சா கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply