சென்னை அண்ணா சாலையில் நள்ளிரவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் குழாய்களை கையில் வைத்துக் கொண்டும், சத்தமிட்டபடியும் மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேர் பிளாஸ்டிக் குழாய்களால் தரையை தேய்த்தபடி சென்றனர்.
இன்னொரு மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேர் கோஷமிட்டபடி சென்றனர். இதை வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். தகவலின் பேரில் 6 பேரையும் விடிய விடிய போலீசார் தேடி வந்த நிலையில், திருவல்லிக்கேணியில் இன்று அதிகாலை போலீசாரிடம் சிக்கினார்.
அவர்கள் நான்கு பேர் அண்ணா சாலையை சேர்ந்த முத்து, புதுக்கோட்டையை சேர்ந்த சீனிவாசன், விஜி, நவீன் குமார் என்றும்எஞ்சிய இருவர் 16 வயது சிறுவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.






