நடிகை ரஷ்மிகா ரூ1.5 கோடி வருமானத்திற்கு வரி கட்டவில்லை

நடிகை ராஷ்மிகா 3.94 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கணக்கில் காட்டவில்லை என்றும், இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் ரஷ்மிகாவின் சொந்த ஊரான கர்நாடக மாநிலம் குக்கலூரில் உள்ள வீடு மற்றும் திருமண மண்டபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இருநாட்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் திருமண மண்டபத்தில் இருந்த கணக்கில் காட்டாத 25 லட்ச ரூபாய் சிக்கியது.

 

3.94 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ரஷ்மிகா குடும்பத்தினர் கணக்கில் காட்டவில்லை என்பதும், ஒன்றரை கோடி ரூபாய் வருவாய்க்கு வரி செலுத்தவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வருகிற 21-ஆம் தேதி மைசூர் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகை ரஷ்மிகா அவரது தந்தை மதன் மந்தனா, தாய் சுமன் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Leave a Reply