நரிக்குறவரின் வேட்டைத் துப்பாக்கி கீழே விழுந்து வெடித்ததில், ஒருவர் படுகாயம்

ஆற்காடு அருகே நரிக்குறவரின் வேட்டை துப்பாக்கி கீழே விழுந்து வெடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் முரளி என்பவர் தனது துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

 

அப்போது வேகத்தடை மீது இரு சக்கர வாகனம் ஏறி இறங்கிய போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி கீழே விழுந்து வெடித்ததில் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த சாத்தூர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் கழுத்தில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து உள்ளது.

இதில் கழுத்து, தோள்பட்டை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமுற்ற சண்முகம் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நரிக்குறவர் துப்பாக்கி வெடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply