செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பு? நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி கண்ணாடிகள்

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் லாரிகளை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர்.

 

பரணர் சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள், இதுதொடர்பாக சிமென்ட் லாரி உரிமையாளர்களின் உதவியாளர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

 

இதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர்கள் 6 பேர் சுங்கச்சாவடியில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் லாரி ஓட்டுனர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு சுங்கச்சாவடி கண்ணாடிகளை ஓட்டுநர்கள் அடித்து நொறுக்கினர்.

 

தகவலறிந்து சென்ற போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து அழைத்து சென்றனர். முன்னதாக போலீசாருடன் ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


Leave a Reply