டெல்லி : மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகை தீபிகா படுகோன் நேரில் சென்று ஆதரவு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ள நிலையில் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது.

 

கடந்த ஐந்தாம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆயுதங்களோடு முகமூடி அணிந்து சென்ற நபர்கள் மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணையாகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மாணவர்களை நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.


Leave a Reply