ஐபிஎல் சூதாட்ட வழக்கு: ஸ்டார் ஓட்டல் அதிபரிடம் சிபிசிஐடி விசாரணை தீவிரம்

சென்னை எழும்பூர் நட்சத்திர விடுதி அதிபரிடம் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ரியல் எஸ்டேட் பிரமுகர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

குயு பிரிவிலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கை விசாரிக்க முத்தில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த வழக்கில் மறு விசாரணை தொடர இருக்கும் சிபிசிஐடி காவலர்கள் 23 பேரை குற்றவாளிகளாக பட்டியலிட்டனர். இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதி அதிபர் விக்ரம் அகர்வாலிடம் சிபிசிஐடி நான்கு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.


Leave a Reply