--- --:--:-- --

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல் – சட்டப்பேரவை 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு!!

et

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மறைவிற்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பின், அவை நிகழ்வுகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகருமான பி.எச். பாண்டியன் 3 தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று காலை சட்டப்பேரவை கூடியவுடன் சபாநாயகர் ப.தனபால் இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

 

அப்போது, சபாநாயகராக இருந்த போது, சட்டப்பேரவையின் மாண்பை கட்டிக்காத்தவர். தனக்கென தனி முத்திரை பதித்தவர் என பி.எச்.பாண்டியனுக்கு புகழாரம் வாசித்தார். இதன்பின்னர் எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சட்டப்பேரவை 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 13 பேர் மறைவிற்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது .

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon