ஊராட்சி தலைவரானார் 22 வயது இளம்பெண்
திருவாரூர் மாவட்டம் பூசலாங்குடி ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் 22 வயதான பட்டதாரி பெண் வெற்றி பெற்றுள்ளார். திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியை சேர்ந்த ரவியின் மகள் சுபிதா பிபிஏ படித்துவிட்டு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டவர் 199 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 499 வாக்குகளில் 199 வாக்குகள் பெற்ற அவர் ஊராட்சிக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்ய முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




