தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரன் 632 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து ஒரு சவரன் 30 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 79 ரூபாய் விலை உயர்ந்து, 3 ஆயிரத்து 815 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரே நாளில் ரூ 632 ரூபாய் விலை அதிகரித்து 30 ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து 51 ரூபாய் 40 காசுகள் ஆக உள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு நகை கடைக்கு சென்ற வாடிக்கையாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் எதிரொலியாக தங்கத்தின் விலை திடீரென உயர்ந்திருப்பதாக நகை வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.