வாக்குச்சீட்டில் குளறுபடி: 9 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சீட்டுகளை ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக 9 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தூத்துக்குடி, கடலூர், நாகை, தேனி ,மதுரை ஆகிய 9 வாக்கு சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

 

தூத்துக்குடி நாலுமாவடியில் 67, 68 ,69, 70, 71 ஆகிய ஐந்து வாக்குச்சாவடிகளிலும், கடலூர் மாவட்டம் விலங்கள்பட்டு ஊராட்சியில் இருக்கும் 245வது மையத்திலும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாகை மாவட்டம் தாடிக்கொம்பு கிராமத்தில் 119 வது வார்டில், மதுரை கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் இருக்கும் வஞ்சி நகரத்தில் 91ஆவது வார்டிலும், தேனி மாவட்டம் உப்புக்கோட்டை ஊராட்சியில் இருக்கும் 52ஆவது வார்டிலும் மறு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.


Leave a Reply