பள்ளி மாணவர்களுடன் புத்தாண்டு கொண்டாடினார் நடிகர் பார்த்திபன்

பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுடன் நடிகர் பார்த்திபன் புத்தாண்டை கொண்டாடினார். சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்த்திபன் மனிதநேய மன்றம் மற்றும் லகர துறை சார்பில் பார்த்திபனின் 2020 கனவுகள் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் கலந்துகொண்டு பலூன்கள் பறக்க விட்டு மாணவிகளோடு நடிகர் பார்த்திபன் புத்தாண்டை கொண்டாடினார். பறை நிகழ்ச்சியின் துவக்கமாக மாணவிகளின் பரதநாட்டியம் , இளைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

பின்னர் மாணவிகளுக்கு பரிசுகளை பார்த்திபன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பள்ளி குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது ஒரு மனித வளர்ப்பு நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.


Leave a Reply