முதல்வர் எடப்பாடி பழனிசாமி சீனா பயணம்?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக சீன குழு ஒன்று சென்ற டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு வந்தது.

 

இந்நிலையில் சீன அதிபரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நாட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த ஆண்டில் பத்து நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.


Leave a Reply