இந்தியா பற்றி எரிந்து கொண்டிருப்பதற்கு அதிமுகவும், பாமகவும் தான் காரணம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பெரியார் நகரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
திமுக ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லையென்றாலும் சிறுபான்மை சமுதாயத்திற்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும், குடியுரிமை சட்டத் திருத்தத்தினால் இலங்கை தமிழர்கள் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா விவாதத்தின்போது மாநிலங்களவையில் அதிமுக, பாமக ஆகிய இரு கட்சிகளும் எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டத்தை முறியடித்து இருக்க முடியும் எனவும் குறிப்பிட்ட முகஸ்டாலின் இலங்கை தமிழர்களுக்கு எப்படி இரட்டை குடியுரிமையை முதல்வர் வலியுறுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.