--- --:--:-- --

இராமநாதபுரத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி அவரது உருவ கேக் வடிவமைப்பு

a

அன்னக்கிளி மூலம் சினிமா உலகில் தடம் பதித்த இளையராஜா தாரை தப்பாட்டை வரை ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து ரசிகர்களை கவர்ந்த இசை ஞானியின் இசைப்பயணம் தொடர்கிறது. திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய அவர், சிம்பொனி இசையிலும் சாதனையை படைத்தார்.

 

இசை சாதனைக்காக ஏராளமான விருதுகளை குவித்த இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி இராமநாதபுரம் பாரதி நகர் ஐஸ்வர்யா பேக்கரி, சார்பில் இளையராஜாவை பெருமைப்படுத்தும் விதமாக 5 அடி உயர அவரது உருவ கேக் வடிவமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். இந்நிறுவனத்தார், பாரதியார் உருவ உயர கேக், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பை வெல்ல வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கோப்பை வடிவ கேக் தயாரித்து ரசிகர்களை கவர்ந்தனர்.

இந்நிலையில் வாழும் காலத்திலேயே இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி அவரது உருவ கேக் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேக்கரி மேலாளர் சதீஷ் கூறியதாவது பிறவி கலைஞர் இளையராஜா இசையில் அமைந்த பாடல்கள் காதல், தனிமை, சோகம், சந்தோஷம், பயணம் என அனைத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்களுடன் பயணித்துள்ளது.

 

உரிய அங்கீகாரம், பாராட்டு மட்டும் தான் ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய சந்தோஷம். உலகெங்கும் வாழும் தமிழர்ளை இசையால் பெருமை சேர்த்த இளையராஜாவை நாம் பெருமைபடுத்த வேண்டும். பாரத ரத்னா விருது பட்டியலை பார்த்தால் பலருக்கு மறைவிற்கு பின்னரே வழங்கப்பட்டுள்ளது.

 

பல்வேறு துறை சாதனையாளர்களை அவர்கள் வாழும்போதே அங்கீகரிப்பதே அவர்களுக்கு தரும் மிகப்பெரிய மரியாதை, கவுரவம், இளையராஜாவை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க, 50 கிலோ சர்க்கரை , 250 முட்டையால், 5 அடி உயர அவரது உருவச்சிலை கேக் செய்துள்ளோம்.
ஐந்து பேர் ,5 நாளில் செய்து பார்வைக்கு வைத்த இச்சிலையை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்பி எடுத்துச் செல்கின்றனர் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon