ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க, நவீன கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தையை மீட்க மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். திருச்சியில் 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் சுபாஷ் சந்திரன் என்பவன் நவீன கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவியில் குழந்தையை கண்காணிக்கும் விதமாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பத்திரமாக மீட்கும் விதமாக இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாத ஆய்வுக்கு பிறகு தனது தந்தையின் உதவியுடன் கருவியை வடிவமைத்துள்ள சுபாஷ் அதனின் செயல்பாடுகள் குறித்து சக மாணவர்களிடம் விளக்கினார்.


Leave a Reply