--- --:--:-- --

நீரில் மூழ்குவதை விளையாட்டு என நினைத்து, நண்பனை பறிகொடுத்த இளைஞர்கள்

5

கர்நாடகாவில் கல்குவாரி குட்டையில் குளித்த இளைஞர் அவரது நண்பர்கள் கண்ணெதிரே நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவர் நீரில் மூழ்குவது உணராமல் நண்பர் ஒருவர் அதனை செல்போனில் படம் பிடித்த காட்சி வெளியாகியுள்ளது.

 

கர்நாடகாவின் ஒரு மாவட்டத்தை சேர்ந்த ஒரு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மிஜ்குரி என்ற இடத்தில் கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் குளிக்க சென்றுள்ளனர். நண்பர்கள் நீரில் நீச்சல் அடித்ததை அவர்களில் ஒருவர் செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார்.

 

அதில் முதலில் நீந்திய இளைஞர் கரையேறி விட, அடுத்து ஜாபர் என்பவர் நீரில் குதித்து நீந்தினார். கரைக்கு அருகே வரும்போது சமநிலை தவறியதால் ஜாஃபர் நீந்த முடியாமல் மூழ்கத் தொடங்கினார். இதனை உணராத நண்பர்கள் ஜாபர் விளையாடுவதாக நினைத்துக்கொண்டனர்.

 

இந்த விளையாட்டு தனத்தால் ஜாபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் குறித்து மிஜ்குரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜாபர் நீரில் மூழ்கிய செல்போன் காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon