நெடுஞ்சாலைகளில் அத்துமீறி பைக் சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள்

திருத்தணியில் இருசக்கர வாகனங்களை கொண்டு சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சமடைந்து இருக்கிறார்கள்.

 

தமிழக ஆந்திர எல்லையில் உள்ள திருத்தணி முக்கிய நகரமாகவும், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று என்ற ஆன்மீக தலமாகவும் திகழ்கிறது. திருத்தணியை ஒட்டிய சாலைகளில் வாகன போக்குவரத்து எப்போதுமிருக்கும். கடந்த சில நாட்களாக சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலைகளில் இளைஞர்கள் சிலர் பைக்ரேஸ்களியிலும், சாகசங்களில் ஈடுபடுகின்றனர்.

 

இளைஞர்களின் இருசக்கர வாகன சாகசங்களால் விபத்துகள் நேரிடுமோ என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சமடைகிறார்கள். அசம்பாவிதம் நேரிடும் முன்பு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பைக்ரேஸ் மற்றும் சாகசங்களை தடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply