தரமற்ற முறையில் உணவு தயாரிப்பு: கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
சென்னையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதோடு பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தி வந்த துரித உணவு கடைக்கு சீல் வைக்கப்பட்டது .சென்னை புதுப்பேட்டையில் சாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான துரித உணவு கடையில் இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவரில் உணவு பரிமாற பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆயுதப்படை காவலர் சரவணன் கடைக்காரர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் துரித உணவு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து தகவல் அறிந்து வந்த மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டறியப் பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து 20 கிலோ உணவு பொருட்களை அளித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




