நடிகர் விஜய்க்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக கடந்த சனிக்கிழமை சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு வந்தது.

 

இதனையடுத்து சென்னை சாலிகிராமம் மற்றும் பனையூரில் உள்ள விஜயின் வீடுகளில் சோதனையிட்ட காவல்துறையினர் பாதுகாப்பும் அளித்தனர்.மிரட்டல் வந்த தொலைபேசி எண்ணை கண்டறிந்ததில் அது போரூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த இளைஞரின் எண் என்பது தெரியவந்தது.

 

இதனை அடுத்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் சேப்பாக்கத்தில் அடையாளம் தெரியாத நபர் தனது செல்போனை கடன் கேட்டு பேசியதாக கூறினார். இதையடுத்து சேப்பாக்கம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


Leave a Reply