கடலூர் வெள்ளவாரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே கனமழையால் வெள்ளவாரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளைகாரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விசுர் பகுதியில் கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன் எட்டு கோடி ரூபாய் செலவில் இரு புறமும் கரை அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கரை உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




