பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடிகள்

சென்னை திருமங்கலத்தில் பொது இடத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டதால் வாகனங்களை ரவுடிகள் அடித்து நொறுக்கி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தீபாவளியன்று பெரியார் தெருவில் நேரிட்ட இந்த சம்பவம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வன்முறையில் ஈடுபட்ட முக்கிய ரவுடிகளை போலீசார் தப்பிக்க விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்த இதயச்சந்திரன் என்பவர் போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டுள்ளார்.


Leave a Reply