சுர்ஜித் உயிரிழந்துவிட்ட நிலையில் இனியாவது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் : நடிகர் விவேக்
சுர்ஜித் உயிரிழந்து விட்ட நிலையில் இனியாவது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என நடிகர் விவேக் கூறியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் விவேக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒழுக்க நெறியோடு வாழ தேவரின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணம் என தெரிவித்தார். முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படிக்க வேண்டும் என்றும் விவேக் பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




