--- --:--:-- --

மழைநீர் சேகரிப்புத்தொட்டிக்குள் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

10

விருதுநகர் மாவட்டம் ஒண்டிபுலி நாயக்கனூர் கிராமத்தில் மழைநீர்சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தான். அம்பத்தூர் அருகே உள்ள ஒண்டிபுலி நாயக்கனூரில் உள்ள தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தார். இன்று காலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் காணாத நிலையில் குடும்பத்தினர் சிறுவனை தேடிவந்தனர்.

 

அப்போது வீட்டின் அருகே உள்ள சுமார் 4 அடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் சிறுவன் ருத்ரன் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனே சிறுவனை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறுவன் ருத்ரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon