பிகில் திரைப்படத்தின் வசூல்வேட்டை!
தீபாவளியன்று வெளியான விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியாகி பெரும் வசூல் வேட்டையாடியது. விஜய், நயன்தாரா நடித்த இந்தப் படத்தை அட்லி இயக்கியுள்ளார். பிகில் திரைப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. இந்த திரைப்படம் திரைக்கு வருமா? வராதா? என பல குழப்பங்களையும் தாண்டி வெற்றிகரமாக தீபாவளி விருந்தாக 25ஆம் தேதி திரைக்கு வந்தது.
பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் இந்த படத்தின் இயக்குனர் அட்லி. இயக்கத்தில் விஜய் மைக்கேல் மற்றும் ராயப்பன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். 180 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தை எடுத்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஒரு புறம் விஜய் ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்க மற்றொரு பக்கம் படம் நன்றாக இல்லை என்ற கருத்துக்களும் வெளிவந்ததுள்ளது. ஆனால் விஜய் ரசிகர்கள் இன்றும் பிகிலை கொண்டாடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




