கணவர் கண்முன்னே உடல் நசுங்கி உயிரிழந்த மனைவி

காரைக்குடியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி பகுதியை சேர்ந்த சண்முகம், ரேவதி தம்பதி கட்டிட வேலைக்காக இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.

ரயில்வே சாலை பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாமல் உள்ளதால் அப்பகுதி வழியாக சென்ற தனியார் பள்ளி வாகனம் நின்றுள்ளது. அதன் பின்னால் சென்ற சண்முகம் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனை அறியாமல் பள்ளி பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்புறமாக இயக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி கணவன் மனைவி கீழே விழுந்து உள்ளனர்.

இதில் ரேவதி பேருந்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடாமல் இருப்பதால் தான் தொடர் விபத்து நடைபெற்று வருவதாகவும் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். விபத்து நேரிட்ட பகுதியிலுள்ள குழியை அப்பகுதி இளைஞர்கள் தாமாக முன்வந்து ஜேசிபி இயந்திரம் கொண்டு சீரமைத்தனர்.


Leave a Reply