திருவாடானையில் 5555 மரக் கண்றுகளை இலவசமாக வழங்கிய இளைஞர்கள்

இராமநாதபூம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று கூடி நாச்சியார் பாய்ஸ் என்ற பெயரில் வந்த இவர்கள் ஒரு பெரிய லாரியில் தென்னை, மா, நெல்லி, மாதுளை, கொய்யா, போன்ற பல்வகையான 5555 மரக்கன்றுகளை கொண்டு வந்து மக்களுக்கு இலவசமாக வழங்கினார்கள்.

இந்த மரக்கன்றுகளை ஏராளமான மக்கள் வாங்கிச் சென்றார்கள், இது பற்றி இந்த நாச்சியார் இளைஞர்கள் கூறுகையில் கமுதியில் உள்ள தேசிய தலைவர் தேவர் திருமகனார் குருபூைஜையை முன்னிட்டு வழங்குவதாகவும், கடந்த வருடமும் இதே போல் 3000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டதாகவும் மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வதாகவும் தெரிவித்தார்கள். தொடர்ந்து இது போன்ற மரக்கன்றுகளை நடுவதால் சுற்றுப் புறம் தூய்மையாகவும் மாசற்ற காற்றும் இயற்கையான சூழல் வரும் தலைமுறைக்கு உதவும் என்று தெரிவித்தார்கள். இந்த நிகழ்ச்சியல் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு வழங்கினார்கள்.


Leave a Reply