தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில்களில் அலங்காரம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில்களில் செய்யப்பட்டுள்ள சிறப்பு அலங்காரங்கள் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளை கவரும் விதமாகவும், ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக தீபாவளியை முன்னிட்டு, சென்னை விமான நிலையம், வண்ணாரப்பேட்டை, சென்னை சென்ட்ரல் வழித்தடங்களில் இயக்கப்படும் 15 மெட்ரோ ரயில்களில் மாவிலை தோரணங்கள், ஜன்னல்களில் வண்ண விளக்குகளால் ஆன சிறப்பு அலங்காரங்கள் மற்றும் தரைதளத்தில் கண்ணை கவரும் வகையில் வண்ணக்கோலங்கள் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த மங்களகரமான சிறப்பு அலங்காரங்கள், தங்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Leave a Reply