பூண்டி, ஸ்ரீ பகவதி ஏஜென்சி பெட்ரோல் பங்கில் 8 ஆம் ஆண்டாக தீபாவளி பரிசுகளை வெல்லுங்கள் விழா

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் திருப்பூர், திருமுருகன்பூண்டி, பப்பிஸ் ஹோட்டல் எதிரில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டீலரான ஸ்ரீ பகவதி ஏஜென்சி சார்பில் தீபாவளியை முன்னிட்டு 8 ஆம் ஆண்டாக தீபாவளி பரிசுகளை வெல்லுங்கள் என்ற பெட்ரோல் பங்க் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கடந்த செப்டம்பர் மாதம் 19 ந் தேதி முதல் 8 ந் தேதி வரை பெட்ரோல் பங்கில் ரூ.200 க்கு பெட்ரோல், டீசல் அடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தவர்களை குலுக்கள் முறையில் தேர்தெடுக்கப்பட்டனர்.

 

இதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஸ்ரீ பகவதி ஏஜென்சி பங்க் வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு ஸ்ரீ பகவதி ஏஜென்சி நிறுவனர் பழனிசாமி தலைமை தாங்கினார். கன்ஷியூமர் கேர் அசோசியேஷன் செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் சென்னியப்பன், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, உறுப்பினர்கள் குமார், சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பங்க் டீலர் கவிதாதனசேகரன் வரவேற்றார். கன்ஷியூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாட்சா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

முதல் பரிசாக பூண்டி திருநீலகண்டர் வீதியை சேர்ந்த கிருஷ்ணவேணிக்கு ரூ. 67 ஆயிரம் மதிப்புள்ள ஹோண்டா டியோ ஸ்கூட்டர், அதே பகுதியை சேர்ந்த சவுந்திரராஜன் மற்றும் கோமதிக்கு கு 2 வது பரிசாக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பட்டுசேலைகள், 3 வது பரிசாக 10 பேருக்கு ரூ 1000 ஆயிரம் மதிப்புள்ள ஹெல்மெட்டுகள், மேலும் 4 வது பரிசாக ஆட்டோமேட்டிக் பைக் வாட்டர் வாஷிங் மிஷின் மூலம் 10 பேரின் 2 சக்கர வாகன ங்களுக்கு இலவசமாக வாட்டர் சர்வீசும் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆறுதல் பரிசாக விழாவில் கலந்துகொண்டவர்கள் குலுக்கல் முறையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிகில் பட டிக்கெட் வழங்கப்பட்டது. விழாவினை பூண்டி ரோட்டரி சங்க பட்டய தலைவர் முருகானந்தம் தொகுத்து வழங்கினார். முடிவில் கன்ஷியூமர் கேர் அசோசியேஷன் செயற்குழு உறுப்பினர் தனசேகர் நன்றி கூறினார்.


Leave a Reply