திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் ஊத்துக்குளி கொங்கு பள்ளி 3 ம் இடம் பெற்று சாதனை

டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவினாசி, டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அக்கினி துளிர்கள் அறக்கட்டளை, திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.

 

எடைப்பிரிவில், தொடுதல் முறையில் நடந்த இந்த சிலம்பாட்ட போட்டியில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஊத்துக்குளி கொங்கு மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் 9 மாணவ, மாணவிகள் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டனர். சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடி 64 புள்ளிகளை பெற்று மாவட்ட அளவில் 3 வது இடம் பெற்றதுடன், கலந்துகொண்ட 9 பேரும் பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

 

25 – 30 கிலோ எடைப்பிரிவில் 6 – ம் வகுப்பு மாணவர் பரணீதரன், 25 – 30 கிலோ எடைப்பிரிவில் 8 – ம் வகுப்பு மாணவர் மௌலீதரன், 63 கிலோ எடைப்பிரிவில் 6 – ம் வகுப்பு மாணவர் சந்தோஷ்குமார், 71 கிலோ எடைப்பிரிவில் 8 – ம் வகுப்பு மாணவர் விமல், 50 கிலோ எடைப்பிரிவில் 8 – ம் வகுப்பு மாணவி வின்சி எழில் புஷ்பம், 40 – 45 கிலோ எடைப்பிரிவில் 8 -ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோல், 63 கிலோ எடைப்பிரிவில் 6 -ம் வகுப்பு மாணவர் சுதர்ஷன், 25 – 30 கிலோ எடைப்பிரிவில் 6 -ம் வகுப்பு மாணவர் உதயகுமார், 50 கிலோ எடைப்பிரிவில் 8 – ம் வகுப்பு மாணவர் தீனதயாளன் ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றனர்.

 

இதைத்தொடர்ந்து சிலம்பாட்ட போட்டியில் மாவட்ட அளவில் 3 ம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவர் ஏ.கே.சி தியாகராஜன், செயலாளர் கே.செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகர், முதல்வர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கொங்கு மெட்ரிக் பள்ளி அறக்கட்டளை நிர்வாகிகள், பயிற்சியாளர் ஜெயசந்திரன், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Leave a Reply