இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் : முதல்வர் எடப்பாடியிடம் வாழ்த்து

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நாங்குநேரியில் வெற்றி பெற்ற நாராயணனும், விக்ரவாண்டியில் வெற்றி பெற்ற முத்தமிழ் செல்வனும் சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் நாராயணன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி தொகுதியை கைப்பற்றியதற்கு தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் முறையாக கொண்டு சேர்த்ததே காரணம் என்று அவர் கூறினார்.


Leave a Reply