--- --:--:-- --

சினிமா பாணியில் ஆம்புலன்சில் கஞ்சா கடத்தல் – திருப்பூரில் ரூ 1.கோடி கஞ்சா பறிமுதல்

Capture

அண்மையில் வெளியான ‘சிவப்பு-மஞ்சள்-பச்சை’ என்ற திரைப்படத்தில் வருவதைப்போல திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அவசர மருத்துவ ஊர்தியின் மூலம் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அவசர மருத்துவ ஊர்திகளை சொந்தமாக வாங்கி சேவை செய்து வந்தார். இந்த ஊர்திகளில் கஞ்சா கடத்தப்படுவதாக கோவை மாவட்ட போதை தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள கருப்பசாமியின் வீடு சோதனையிடப்பட்டது. வீட்டில் எதுவும் கிடைக்காத நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவசர மருத்துவ ஊர்திகளில் 13 மூட்டைகளில் கஞ்சா பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருப்புசாமியின் கூட்டாளியான அருள் என்பவரை கைது செய்தனர்.

 

போலீசார் கைப்பற்றிய கஞ்சாவின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர். தலைமறைவான கருப்புசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon