வாக்கு மையத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு சீல் வைப்பு!

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு மையத்திற்கு கொண்டுவரப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. பாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றிருந்தது. இதையடுத்து தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 275 மையங்களில் இருந்து 203 வாகனங்களில் வாக்கு எண்ணும் மையமான தனியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

பிறகு மூன்றடுக்கு போலீசார் கொண்ட பாதுகாப்புடன் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீல் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply