சீனப் பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை … சுங்கத்துறை எச்சரிக்கை

ஆபத்தை விளைவிக்கும் சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக சுங்கத்துறை அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் சீனப் பட்டாசுகளை சட்டவிரோதமாக கொள்முதல் செய்வது, விற்பனை செய்வது போன்றவை சுங்கத்துறை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சீனப்பட்டாசுகள் மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய பொருட்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன என்றும் இத்தகைய பட்டாசுகளை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.சீனப் பட்டாசுகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்தோ,விற்பனை செய்வது குறித்தோ தெரியவந்தால் பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்குமாறு சென்னை சுங்கத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.


Leave a Reply