ராமநாதபுரத்தில் பிரிவினைவாத கருத்துக்களை முகநூலில் பதிவிட்ட வழக்கறிஞர்; தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!

இராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் திருமுருகன் (எ) தீரன் திருமுருகன், 35. வழக்கறிஞரான இவர், தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கத்தை நிறுவி மீனவர்களின் பிரச்னைகளுக்கு போராடி வருகிறார். தமிழர் கட்சியின் பொதுச்செயலராகவும் உள்ளார். தமிழ்நாடு மீட்பு படை நிறுவனர் தமிழரசன் கொள்கையை பின்பற்றிய இவர், தனித் தமிழ்நாடு கோரும் பிரிவினைவாத கருத்துகளை அவரது முகநூலில் பதிவிட்டு வந்தார்.

சமீபத்தில் மதுரை சென்ற திருமுருகன், மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள கடைகளில் ஹிந்தி மொழி பெயர் பலகைகளை முற்றிலும் தமிழில் எழுதி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இது தொடர்பான செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இதனையடுத்து தனி தமிழ்நாடு கோரி கடந்த சில நாட்களாக முகநூலில் கடும் விமர்சனம் செய்து வந்தார்.

இந்நிலையில் மதுரையில் நண்பர் வீட்டில் நேற்று தங்கியிருந்த திருமுருகனை பலத்த போலீஸ் பாதுகாப்பில் திருவாடானை அழைத்து வரப்பட்டு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


Leave a Reply