ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, மார்க் குறைவாக எடுத்த மாணவர்களை ஆசிரியை சரமாரியாக அடித்து உதைத்ததில் 20-க்கும் அதிகமான மாணவர்கள் காயம் அடைந்ததாக புகார் எழுந்துள்ளது.
கோபி அருகே உள்ள கூகுள் ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் சிவகாமி . கணித தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 24 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கை மற்றும் கால்களில் காயமடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள் :
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்ட முடிவுகள்!
வங்கக் கடலில் உருவானது மிக்ஜாம் புயல்..!
விஜயகாந்த் நலம்..போட்டோ வெளியிட்ட குடும்பத்தினர்!
மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!