டெல்லி உயிரியல் பூங்காவில் மதுபோதையில் சிங்கத்திடம் நேருக்கு நேர் நின்ற ஒருவரால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டெல்லி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை மக்கள் வழக்கம்போல பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிலைகள் நடமாடும் பகுதியில் பிரம்மாண்ட சுவர் மற்றும் இரும்பு படிகளைத் தாண்டி இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.
சுற்றி இருப்பவர்கள் அதனை பார்த்து அச்சத்தில் அலற அது குறித்தெல்லாம் கவலை படாத அந்த இளைஞர் நேராக சிங்கத்தின் அருகில் சென்றார். சில அடி கூட இடைவெளி இல்லாத அளவிற்கு அருகில் அமர்ந்து சிங்கத்தின் முகத்தை நேருக்கு நேர் அந்த இளைஞர் பார்த்துக்கொண்டிருக்க சிங்கமும் அமைதியாக இருந்தது. தரையில் அமர்ந்து சிங்கத்தின் முகத்தை தடவி கொடுத்தும் அவனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த இளைஞரின் செயல் காண்போரை அச்சத்தில் ஆழ்த்தியது.
சில நொடிகள் அமைதியாக இருந்த சிங்கம் பின் அந்த இளைஞரை தாக்க முயன்றது. அப்போது மயக்க ஊசியை சிங்கத்தின் உடலில் செலுத்தி இளைஞரை உயிரியல் பூங்கா ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.