தொழிலாளியின் கழுத்தைச் சுற்றி வளைத்த மலைப்பாம்பு…!

கேரளாவில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர் மீது மலைப்பாம்பு சுற்றிவளைத்த சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடை எனும் பகுதியில் சில தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு தொழிலாளியின் அலறல் சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள் வந்து பார்த்தபோது மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று அவர் கழுத்தை சுற்றி நெறித்துக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

உடனடியாக விரைந்து அவர் கழுத்தில் சுற்றியிருந்த மலைப்பாம்பு கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தினார்கள். அவரின் கழுத்தின் மேல் இருந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


Leave a Reply