பாலியல் வன்கொடுமை! திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்

திருமணம் செய்ய மறுத்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொன்றதாக இரட்டை சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த 16 வயது சிறுமி இரட்டை சகோதரர்களின் கோரப் பற்களுக்கு இரைஆகியுள்ளார். புத்திமதி சொல்லி வழிகாட்ட வேண்டிய அண்ணனே ஒரு பெரும் அக்கிரமத்தை செய்ய தம்பிக்கு உடந்தையாக இருந்தது தான் இச்சம்பவத்தின் கசப்பான உண்மை.

 

மதுரையில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்கத்து கிராமத்தில் கோயில் திருவிழா நடந்தால் அதனை காண்பதற்காக உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த சிறுமி. வாழைத்தோட்டத்தில் குளிக்கச் சென்ற சிறுமி இரவாகியும் வீடு திரும்பவில்லை பதறிப்போன பெற்றோரும் உறவினர்களும் ஊர் முழுக்க தேட ஆரம்பித்தனர். காணாமல் போன மகளை கண்டுபிடித்து விடலாம் என நம்பிக்கை கொண்டிருந்த பெற்றோரால் மறுநாள் சிறுமியின் சடலத்தை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதுகுறித்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மாதவன் என்பவர் கைது செய்யப்பட்டார். மழுப்பலாக அளித்த பதில்களை அவர் ஏதோ தவறு செய்திருக்கிறார் என்பதை காவல்துறையினருக்கு உணர்த்தியது. காவலர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாத மாதவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். திருவிழாவை காண வந்த சிறுமிகள் மீது மாதவனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.இதனால் அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று தொல்லை செய்து வந்த மாதவன் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

 

இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கொடுமை என்னவென்றால் இச்சம்பவத்திற்கு மாதவனின் அண்ணன் மதுவும் உடந்தையாக உடந்தையாக இருந்துள்ளார். மாதவனை கைது செய்துள்ள காவல்துறையினர் தப்பியோடிய மதுவை தேடி வருகின்றனர். ஒன்றாக சேர்ந்து கொடும் செயலில் ஈடுபட்ட இரட்டை சகோதரர்கள் சிறையிலும் ஒன்றாகவே தண்டனையை அனுபவிப்பார்கள்.


Leave a Reply