தணிக்கையை சிக்கலின்றி நிறைவு செய்த ‘பிகில்’

விஜய் நடிப்பில் உருவாகிவரும் புகழ் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் உடன் நயன்தாரா விவேக் இந்துஜா யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

ஆக்ஷன் ஃபார்முலாவில் எடுக்கப்பட்டுள்ள திகில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆளும் கட்சிக்கு எதிராக சில கருத்துக்களை கூறினார். இதனால் அதிமுகவினர் விஜயின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் படத்திற்கு தணிக்கையில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் தணிக்கை குழுவினர் பிகில் படத்தை தணிக்கை செய்துள்ளனர்.

 

மேலும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதால் படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். திகில் படம் தணிக்கை செய்யப்பட்டு உள்ள நிலையில் விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கூறியுள்ளார்.


Leave a Reply