மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்று குஜராத்தில் ஒன்பதாம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி அன்று மகாத்மா காந்தி கோட்சே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் குஜராத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகரில் உள்ள கல்வி நிறுவனத் திற்கு உட்பட்ட பள்ளியில் தேர்வுக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்று கேட்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் கேள்வி தாளில் இருந்த மற்றொரு கேள்வியும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மது விற்பனை அதிகரித்து வந்தால் மாவட்ட கண்காணிப்பாளர் எழுதுவீர்கள் என்று கேட்கப்பட்டிருந்தது கேள்விகளால் மாணவர்களுக்கு திடீர் குழப்பம் ஏற்பட்டது எனினும் கேள்வித்தாள் பள்ளியை தயாரிக்கப்பட்டதாக கல்வித்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.