பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி போராட்டம்

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தாங்கள் உறங்கும் படுக்கைகளை சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் படியான புதிய டாஸ்க் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அநாகரிகமாகவும் இந்திய கலாச்சாரத்தை சீர்குலைப்பது விதமாகவும் உள்ளதாக கூறி குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பாக குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கும் பண்ண சல்மான்கானின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


Leave a Reply