ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்:கருட வாகன உற்சவத் திருவிழா

கோவை சரவணம்பட்டி
ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கருட வாகன உற்சவத் திருவிழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

 

கோவை சரவணம்பட்டியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திருமகள் நிலமகள் உடனுறை ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

5 கால வேள்வி பூஜையுடன் திருவிளக்கு வழிபாடு மற்றும் திருக்கல்யாண உற்சவங்களுடன் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது.

 

அதனை தொடர்ந்து, இன்று கருட வாகன உற்சவத் திருவிழா காலை தொடங்கியது. ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்து அலங்கார குதிரை மற்றும் வாணவேடிக்கையுடன் செண்டை மேளம் முழங்க உற்சவம் தொடங்கியது.

 

இந்த நிகழ்ச்சியினை சமூக ஆர்வலரும், நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனருமான அன்பரசன்,கோவை மேற்கு மண்டல காவல்துறை ஆணையர் பெரியய்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

 

கருட வாகன உற்சவம் சரவணம்பட்டியில் பிரதான வீதிகள் வழியாக பஜனைப்பாடல்கள் உடன் திருக்கோவிலை வந்தடைந்தது.

இந்த கருட வாகன உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

 

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர கிழக்கு உதவி ஆணையர் சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் செல்வராஜ்,பீளமேடு இன்ஸ்பெக்டர் ஜோதி, 28வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.அர்ஜுனன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோவில் தலைவர் சிரவை நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Leave a Reply