ஆயுதங்களுடன் டிக்டாக் வீடியோ பதிவிட்ட புள்ளிங்கோ

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் பட்டா கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திட்டக் வீடியோ பதிவு செய்த வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கானா பாடல் பாடிக்கொண்டு கையில் ஆயுதங்களுடன் இளைஞர் சிலர் பதிவு செய்த டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. போலீசார் நடத்திய விசாரணையில் வீடியோவில் உள்ள இளைஞர்கள் அரக்கோணத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

 

இதனையடுத்து சுரேஷ் என்ற இளைஞரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர் அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு டிக்டாக்வீடியோ பதிவிடு போரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply