மர்மமான முறையில் மாயமான மதுரையைச் சேர்ந்த தம்பதி

கரூரில் மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைக்க சென்ற மாயமான மதுரையைச் சேர்ந்த தம்பதியின் கார் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போதைய நிலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை ஆரப்பாளையத்தில் சேர்ந்த செல்வராஜ் சிறிய அளவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நவம்பர் 1ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் மனைவி வசந்தா படையுடன் அழைப்பிதழ் வைக்கும் பணியில் செல்வராஜ் ஈடுபட்டிருந்தார்.

 

கடந்த 10ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உள்ள உறவினர் ஒருவருக்கு அழைப்பிதழ் வைத்துவிட்டு காரில் புறப்பட்டு வந்த அவர்களின் தொடர்பு பிறகு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் டாட்டா இன்டிகா கார் ஒன்று தனியாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

விசாரணையில் அந்த காரை செல்வராஜ் உடையது என்பது தெரியவந்ததை அடுத்து இருவரது நிலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply