திருவாடானை சமத்துவபுரத்தில் சுகாதார கேடாக உள்ள குடி நீர் குழாய்கள் சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை

திருவாடானை சமத்துவபுரத்தில் சுகாதாரமற்ற முறையில் உள்ள குடி நீர் குழாய்கள் உள்ளது. அதனால் நோய் தொற்று அபாயத்தில் மக்கள் உள்ளனர். விரைந்து ஊராட்சி நிர்வாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்கள்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு நூற்றுக்கனக்காண மக்கள் வசித்து வருகிறார்கள்.

 

இந்த மக்களுக்கு குடி நீர் வழங்க அங்கேயே மேல்நிலை தேக்க தொட்டி உள்ளது. ஆனால் இங்கு உள்ள குடி நீர் குழாய்களை தரை மட்டத்தில் இருற்து கீழ் இறக்கி போட்டால் தான் தண்ணீர் வருகிறது. தற்போது இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் மழை நீர் குடி நீர் குழாய்களில் தேங்கிவிடுகிறது. அப்படி தேங்கும் தண்ணீர் மீண்டும் குடிநீர் குழாய்களுக்கு சென்றுவிடுவதால் தண்ணீர் வரும் பொழுது கலங்களாக வருவதோடு துற்நாற்றம் வீசுகிறது. அதனை பிடித்து பயணபடுத்த முடியால் உள்ளது.

அப்படியே பயன்படுத்துவதால் காய்ச்சல், வயிற்று போக்க போன்ற நோய்கள் தாக்குவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பரவலாக டெங்கு காய்ச்சல் பரவிலரும் நிலையில் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழவதாக தெரிவித்தார்கள். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் எவ்வித பலனுமில்லை என்று கவலை தெரிவித்தார்கள். எனவே ஊராட்சி நிர்வாகம் சரிசெய்ய வேண்டி கோரிக்கை வைத்தார்கள்.


Leave a Reply