ஹன்சிகாவிற்கு வில்லனாகும் ஸ்ரீசாந்த்

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை முன்னிறுத்தி வரும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது முதல் வரிசையில் இருப்பவர் நயன்தாரா கதாநாயகனை மட்டுமே முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களுக்கு மத்தியில் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களும் அதற்கு இணையான வருவாயை ஈட்டி வருகிறது.

 

இதனால் தயாரிப்பாளர்களும் கதாநாயகிகளை மையப்படுத்தி கதை களை எடுக்க முன்வந்தனர் இதனையடுத்து நயன்தாராவை தொடர்ந்து த்ரிஷாவும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டார். தற்போது அந்த வரிசையில் ஹன்சிகாவும் இணைந்துள்ளார் திரில்லர் காமெடி கலந்த படமாக உருவாக இருக்கும் இப்படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தை அம்புலி ஜம்புலிங்கம் போன்ற படங்களை இயக்கிய ஹரி ஹரிஷ் என்ற இரு இயக்குனர்கள் இயக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்க இருக்கிறார் ஹிந்தியில் பிக்பாஸ் மூலம் சினிமா வட்டாரங்களில் பிரபலமான ஸ்ரீசாந்த் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

 

இதற்கு முன்னதாக ஹிந்தி கன்னடம் மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீசாந்த் இந்தப் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார். 2020ஆம் ஆண்டு கோடை கொண்டாட்டமாக படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


Leave a Reply